டாடா நிறுவனம் நம்ம ஊரில்! எலக்ட்ரானிக்ஸ் வாகன துறையில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக இருக்கப்போகிறது தமிழகம்!

Update: 2021-03-07 01:00 GMT

கடந்த ஆண்டு தமிழக அரசும் டாடா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டதன் அடிப்படையில் 5000 கோடி ரூபாய் முதலீட்டில் Tata Electronics நிறுவனம் ஓசூர் அருகே அமைக்கப்பட்டுள்ளது. அதன் கட்டுமானப்பணிகள் முடிந்து தற்போது தொழிற்சாலைக்கு தேவையான பணியாளார்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

மொபைல் கைபேசிகள் தயாரிப்பதில் தன்னிறைவு அடைவது உட்பட இந்தியாவின் மின்னணு உற்பத்தி தளத்தை விரிவுபடுத்த மோடி அரசு அறிவித்துள்ள உற்பத்தித்திறன்-இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை டாடா குழுமம் பயன்படுத்திக் கொள்கிறது. 

ஆதாரங்களின்படி, இந்த திட்டத்தை பெறுவதற்கு பல  மாநிலங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் தமிழகம் இந்த ஒப்பந்தத்தை முத்திரையிட்டு அனுப்பியது. தமிழகத்தின் சாதகமான கொள்கைகள் ஃபாக்ஸ்கான், ஃப்ளெக்ஸ், சாம்சங், டெல், நோக்கியா, மோட்டோரோலா மற்றும் பி.ஒய்.டி போன்ற நிறுவனங்களை மாநிலத்தை நோக்கி இழுத்துள்ளது. 

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில், 90%பெண்களை எடுக்கிறார்கள். கிருஷ்ணகிரி,தருமபுரி மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த ஆலையின் மூலம் எலக்ட்ரிகல் வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் வாகன பாகங்கள் உற்பத்தியில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக இருக்கப் போகிறது  தமிழகம்.

Similar News