பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள விருப்பமா? உச்சநீதிமன்ற நீதிபதியின் கேள்வியை தவறாக சித்தரித்த ஊடகங்கள்!

Update: 2021-03-10 01:45 GMT

மகாராஷ்டிர மாநில அரசு ஊழியா் மீது, 14வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு, முன் ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அங்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை மும்பை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு, 'பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கிய பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா? அவ்வாறு திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தால், ஜாமீன் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இல்லையெனில் சிறை செல்ல வேண்டியிருக்கும்' என்றனா்.

உச்சநீதிமன்றத்தின் இந்தக் கேள்வி கடந்த வாரம் பெரும் விவாதத்துக்கு ஆளானது. நீதிபதி மன்னிப்பு கேட்க வேண்டும், கருத்தை திரும்பப் பெற வேண்டும் என பெண்ணுரிமை ஆா்வலா்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினா்.

இப்படியான விமா்சனங்களைத் தொடா்ந்து, அதற்கான விளக்கத்தை உச்சநீதிமன்ற தரப்பு வெளியிட்டது. அதில், நீதிமன்றத்தின் கருத்தை விமா்சிப்பது முறையல்ல. வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள பதிவுகளின் அடிப்படையிலேயே நீதிபதிகள் அந்தக் கேள்வியை எழுப்பினா். 

பாலியல் தாக்குதலுக்கு உள்ளான 14 வயது கா்ப்பிணி சிறுமி, தனது 26 வார கருவை கலைக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  ஆதாரங்கள் சட்ட நடைமுறைகள் மற்றும் வழக்கு தொடா்பான நீதிமன்ற பதிவுகளின் அடிப்படையிலேயே, பாலியல் தொந்தரவு அளித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள விருப்பமா என்று குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்டவரின் கருத்தைத்தான் நீதிமன்றம் கேட்டதே தவிர, திருமணம் செய்துகொள்ளுமாறு அவருக்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

நீதிமன்றத்தின் கருத்து முழுவதும் தவறாக சித்திரிக்கப்பட்டு செய்தியாக்கப்பட்டுள்ளது. பெண்கள் மீது உச்சநீதிமன்றத்துக்கு மிகுந்த மதிப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News