கொரோனா நோயாளிகளின் உறவினர்களுக்கு உணவளித்து வரும் அண்ணாமலை IPS..!

Update: 2021-05-31 04:35 GMT

கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்களுக்கு இரவு நேர உணவை பா.ஜ. க மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை அளித்து வருகிறார். கடைசி கொரோனா நோயாளி மருத்துவமனையில் இருக்கும் வரை இந்த உணவு வழங்கும் பணி தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவியதை தொடர்ந்து மத்திய அரசின் போர்க் கால நடவடிக்கையின் காரணமாக தற்போது தேசிய அளவில் கொரோனா தொற்று பரவல் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த சில நாட்களாக நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஓரளவு குறைந்து வந்த போதிலும் கோவையில் பாதிப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

இதன் காரணமாக அதிக எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு உணவு அளிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ஏற்பாடு செய்துள்ளார். கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் உறவினர்களுக்கு இரவு நேர உணவு வழங்கும் பணியை அவர் கடந்த ஏழு நாட்களாக மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "சிங்காநல்லூர் ESI மருத்துவமனை COVID நோயாளிகளின் உறவினருக்கு இரவு உணவு வழங்கும் பொறுப்பை நான் ஏற்றுகொண்டுள்ளேன். ஏழாவது நாளாக இன்று நானும், சிங்காநல்லூர் பாஜக தொண்டர்களும் இணைந்து உணவு கொடுத்து வருகிறோம்.

கடைசி நோயாளி இருக்கும்வரை இந்த உணவு வழங்கும் பணி தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.

இதே போன்று மத்தியில் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்று ஏழு வருடங்கள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக ஊரடங்கு காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கும் பாஜகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News