3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்!

Update: 2021-03-19 12:03 GMT

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் 3 நாள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளார். அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் இந்தியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது வருகை குறித்து, மத்திய பாதுகாப்புத்துறை கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

மேலும் அவருடைய வருகை இந்திய மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்த்து பட்டிருக்கிறது. அதன்படி, இன்று முதல் 21ம் தேதி வரை லாய்ட் ஆஸ்டின் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.


 தொடர்ந்து, இந்தியா – அமெரிக்க இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறை தொடர்பான வர்த்தகம், தொழில்துறையில் ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சவால்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் திறந்த, சுதந்திரமான வர்த்தகம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


 மேலும், டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இந்தியா வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, அவரின் நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ள அமைச்சர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.

Similar News