ரூ.5 கோடி கொரோனோ நிவாரண நிதி வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்!

Update: 2021-05-17 02:15 GMT

கொரோனோ இரண்டாம் அலை தமிழகத்தை உலுக்கி வருகிறது. இதனால் அரசு சார்பில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் இருந்து நிதி கோரப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு நிதியை வழங்கி வருகின்றர். இந்த நிலையில் சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளது.

சக்தி மசாலா நிறுவனம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சக்தி மசாலா நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "ஈரோட்டில் உள்ள சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கரோனா முதல் அலை வந்த கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு கொரோனா நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பேரிடரை எதிர்கொள்ள அனைவரும் நிவாரண நிதி அளிக்க வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி நிவாரண நிதியை, தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு கடந்த 15-ம் தேதிவங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக முதல்வருக்கும் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையின்கீழ், கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சுகாதாரம், வருவாய்த்துறை, காவல்துறை,உணவு வழங்கல் துறை, தொழிலாளர் நலத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சக்தி மசாலா நிறுவனம் சார்பில் பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, மக்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுவதாக" சக்தி மசாலா நிறுவன நிர்வாக இயக்குநர்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Similar News