50,000 ரூபாய்க்கு மதம் மாற மறுத்ததால் சரமாரி தாக்குதல்-காவல்துறை வழக்கு பதிவு!

Update: 2021-04-25 01:00 GMT

மத்திய பிரதேசம் இந்தூரில் பெண் ஒருவர் தன் கணவரை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததற்கு கணவர் மறுத்ததால் அவரை மனைவி மற்றும் மாமியார் அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





மத்திய பிரதேசம் இந்தூரில் பிரகாஷ் நாக்கிலே என்பவர் இந்த கட்டாய மதமாற்ற நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ளார். 36 வயதுடைய இவர் இது தொடர்பாக தன் மனைவி மற்றும் மாமியார் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில் மனைவி மற்றும் மாமியார் தன்னை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவ்வாறு மதம் மாறினால் 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்ததால் வீட்டிலிருந்த இந்து மத வழிபாட்டு புத்தகத்தை மாமியாரும் மனைவியும் சேர்ந்து கிழித்து எறிந்து பிரகாஷை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

மேலும் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறுவதற்காக தனது மனைவியும் அவருடைய தங்கையும் இருசக்கர வாகனத்தை இவங்சலிஸ்டிடமிருந்து பரிசாக பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மதம் மாற்றுவதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருள்களை ஆயுதமாக பயன்படுத்தி கொள்ளும் கிறிஸ்தவ மத மாற்று சக்திகள் மதம் மாறாதவர்கள் மீது இதுபோன்ற தாக்குதலையும் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி ஒரு அனுபம் சகோதரர்(மதம் மாற்றுபவர்) தன்னை கட்டாயப்படுத்தி மதம் மாறுமாறு வற்புறுத்தியதாக பிரகாஷ் நாகேல் குற்றம் சாட்டியிருந்தார். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பிரகாஷின் மனைவி மற்றும் அவரது 9 குடும்ப உறுப்பினர்கள் மீது மத உணர்வுகளை புண்படுத்தியமை, குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் கலகம் செய்ததாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து துவாரகாபுரி காவல் நிலைய காவல்துறை பொறுப்பாளர் சதீஷ் திவேதி, "மத சுதந்திரச் சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 3 மற்றும் 5 ன் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

இந்தியாவில் மதமாற்றம் என்பது கிறிஸ்தவர்களின் மனநோயாக இருந்து வருகிறது. தங்களது மதத்தை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுபவர்கள் மதமாற்றத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நசுக்கி வருவதும் நாம் செய்திகளில் அவ்வப்போது பார்த்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டாய மதமாற்றம் என்பது ஒரு குற்றம் என்பதை அவர்கள் வணங்கும் தெய்வம் தான் அவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும் என்பது பலரின் கருத்துக்களாக இருந்துவருகிறது.

Similar News