பாரம்பரிய உணவுகளின் பயன்கள்

செயற்கை நிறமூட்டிகளோ சுவை கூட்டிகளோ எதுவுமே சேர்க்கப்படாமல் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் உணவுகளின் பயன்கள் குறித்த தகவல்

Update: 2022-09-26 09:15 GMT

குளோரின் கலக்கப்பட்ட குடிநீர், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சீரற்ற உணவு முறை, மன அழுத்தம் போன்றவற்றால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.இவற்றில் இருந்து விடுபடுவதற்கு சிறந்த வழி பாரம்பரிய உணவு முறையை பின்பற்றுவதாகும். பாரம்பரிய உணவுகள் அந்தந்த பகுதிகளில் வளரும் தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றை கொண்டு தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு சமைக்கப்படுகின்றன.தயாரிக்கும் முறைகளும் இவ்வகை உணவுகளில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கின்றன.


இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி, மூளை செயல்பாடு, சரும ஆரோக்கியம் போன்றவை மேம்படும். பாரம்பரிய உணவுகள் பெரும்பாலும் நொதித்தல் முறையில் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நேரம் புளிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப்படும் உணவுகளில் பல நன்மைகள் கிடைக்கும். இத்தகைய உணவுகள் எளிதாக செரிமானம் ஆகக் கூடியவை. நன்மை செய்யும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் இவற்றில் அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். எனவே சத்துக்கள் எளிதாக உறிஞ்சப்படும். பாரம்பரிய சமையலில் தேங்காய் எண்ணெய் ,கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் நல்ல கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் பல உள்ளார்ந்த நன்மைகள் ஏற்படும். சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.


தானியங்கள் மற்றும் பருப்புகளின் கலவையாகவே பெரும்பாலான உணவுகள் சமைக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் உடலுக்கு தேவையான புரதச்சத்தும்,ஆற்றலும், வைட்டமின்களும் கிடைக்கும். இதில் சேர்க்கப்படும் மசாலா வகைகள் நோய் எதிர்ப்பு மற்றும் கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டவை.பாரம்பரியமாக விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும். 

Similar News