குழந்தைகளை குறிவைத்து மதமாற்றம்?- விசாரணை வளையத்தில் செயின்ட் மேரி ஆதரவற்றோர் இல்லம் !

குழந்தைகள் இல்லம் என்ற பெயரில் மதம் மாற்றும் சதி நடக்கிறதா என்பது குறித்து விசாரணை வேண்டும்.

Update: 2021-08-07 02:40 GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), திருச்சூரில் செயல்படும் செயின்ட் மேரி அனாதைகள் இல்லம் (St. Mary Orphanage) Bishops House-Diocese of Thamarassery யிடமிருந்து நன்கொடைகள் பெற்றதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.



இதில் பல FCRA விதிகளை மீறியுள்ளதாகவும், குழந்தைகளை குறிவைத்து மதம் மாற்றிய பல சம்பவங்கள் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. சமீபத்தில் கேரளாவை சேர்ந்த செயின்ட் ஜோசப் குழந்தைகள் இல்லம் (St Josephs Children Home), மதமாற்று சக்திகளிடமிருந்து நன்கொடை பெற்று குழந்தைகளை குறி வைத்து மத மாற்றம் செய்வதாகவும் LRO குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.




இது தொடர்பாக விசாரணை கோரி உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக LRO குறிப்பிட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும், குழந்தைகள் நலத்தையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cover Image Courtesy: Legal LRO 



Tags:    

Similar News