கொரோனாவால் 38 லட்சம் மக்கள் வறுமை நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் !

பொருளாதாரத்தை சீர் செய்ய அணைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன,

Update: 2021-08-06 23:30 GMT

கொரோனவால் உலகம் முழுவது பொருளாதாரம் பின் தங்கி உள்ளது. இந்தப் பின்னடைவிலுள்ள பொருளாதாரத்தை சீர் செய்ய அணைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன, 

இந்த பேரிடர் காலத்தில் வளர்ந்த நாடுகளும் சரி, வளர்ந்து வரும் நாடுகளும் சரி, பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளும் சரி பொருளாதார ரீதியில் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். 

அந்தவகையில் வட அமெரிக்கா நாடான மெக்ஸிகோவில் 38 லட்சம்  மக்கள் வறுமை நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

2018 ஆம் ஆண்டு 20 லட்சம் மக்கள் மட்டுமே வறுமை நிலைமையில் இருந்து வந்தன. கொரோனாவுக்கு பின்பு மெக்ஸிகோவில் 58 லட்சம் மக்கள் வறுமை நிலைமைக்கு தள்ள பட்டு இருகின்றனர் என அந்த நாட்டின் சமூக மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

5.20கோடி மக்கள் தொகை கொண்ட மெக்ஸிகோ நாட்டில்  10.8  சதவீத மக்கள் தொகை  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

Dinamani

Image source : Reuters

Tags:    

Similar News