குதிகால் வெடிப்பும் அதை தடுக்கும் மருத்துவ முறைகளும்

பெரும்பாலானவர்களுக்கு குதிகாலில் வெடிப்பு ஏற்படக்கூடிய பிரச்சனை உள்ளது அதை எப்படி சரி செய்யலாம் என்பது பற்றிய தகவல்.

Update: 2022-09-29 05:45 GMT

நம் பாதங்களில் இருக்கும் பகுதிகளில் குதிகால் பகுதி தான் அதிக அழுத்தத்தை தாங்குகிறது.இதனால் தான் அதிகமாக நடப்பது நின்று கொண்டே இருப்பது போன்ற விஷயங்களால் நிறைய பேர் பாத வெடிப்பை சந்திக்கின்றனர். இந்த குதிகால் வெடிப்பு எந்த காரணத்தினால் உண்டாகிறது மேலும் அதற்கு எப்படி எல்லாம் சிகிச்சை செய்யலாம் என அறிந்து கொள்வோம். குதிகால் வெடிப்பினால் பாதங்களில் பிளவுகள் உண்டாகி வலி ஏற்படுகிறது. இந்த குதிகால் வெடிப்பை நாம் சில இயற்கை முறைப்படி சரி செய்ய முடியும். இயற்கையாகவே பாதங்களில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் போது குதிகால் வெடிப்பு மறைகிறது


பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை குதிகால் வெடிப்பு தான. பல சமயங்களில் நமக்கு வலியையும் ஏற்படுத்துகிறது. இது அப்படியே வளர்ச்சி அடைந்து செல்லுலாய்டிஸை உண்டாக்குகிறது. குதிகாலில் உள்ள சருமம் வறண்டு போகும்போது அதில் வெடிப்புகள் உருவாகின்றன. அதே மாதிரி நாம் நடக்கும்போது குதிகால் பகுதி அதிக அழுத்தத்தை சந்திக்கிறது. இதனால் அதிக அழுத்தம் உண்டாகி அந்த சருமம் தடிமனாகி குதிகால் வெடிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிளவுகள் ஆழமாக போகும்போதுதான் நமக்கு வலியை ஏற்படுத்துகிறது. குதிகால் வெடிப்பை கால்சஸ் என்ற பெயரில் அழைக்கின்றனர்.குதிகால் பகுதியை சுற்றியுள்ள சருமம் கடினமாகி வறண்டு போய் வெடிப்பானது உண்டாகிறது .


நீங்கள் தொடர்ச்சியாக நடந்து குதிகாலுக்குஅழுத்தத்தை கொடுக்கும் போது நிலைமை என்னும் மோசமாகலாம். நீண்ட நேரம் நிற்பது, வெறுங்காலில் நீண்ட தூரம் நடப்பது, சூடான நீரில் குளிப்பது ,காலநிலை மாற்றம், கடினமான சோப்புகளால் தோல் வறண்டு போதல் ,குளிர்ச்சியான காலநிலையால் வறண்ட சருமம் தோன்றுதல் போன்ற காரணங்களால் பாத வெடிப்புகள் உருவாகிறது.


குதிகால் வெடிப்பை சரி செய்ய சிறிதளவு அரிசி மாவு,  அதனுடன் ஆப்பிள் சீடர் வினிகர் , கொஞ்சம் தேன் இந்த மூன்றையும் கலந்து நல்ல பசை போல செய்து இரவு தூங்கும் முன் கால்களை வெந்நீரில் சுத்தம் செய்த பின்னர் இந்த பசையை தினமும் தடவி வந்தால் ஒரு வாரத்தில் குதிகால் வெடிப்பு குணமாகும் .குதிகால் வெடிப்பை சரி செய்ய வேறு ஒரு முறை யாதெனில் மெழுகுவர்த்தியிலிருந்து மெழுகை துருவி தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்து வைத்துக் கொள்ளவும். பிறகு சூடான வெந்நீர் உள்ள பாத்திரத்தில் நாம் துருவி வைத்த மெழுகு மற்றும் கடுகு எண்ணெய் கலவை உடைய கிண்ணத்தை வைத்தால் அந்த மெழுகானது உருகி நன்றாக பசை போல் வந்துவிடும். முன்னர் கூறியது போலவே இந்த பசயை ஒரு வாரத்திற்கு நாம் விட்ட வெடிப்பு உள்ள பாதங்களில் தடவி வர குணம் அடையும்.

Similar News