ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு மற்றும் தேசவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறை அதிரடி நடவடிக்கை!

காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல் மற்றும் தேசவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு வேலை மற்றும் பாஸ்போர்ட் வழங்க படமாட்டாது.

Update: 2021-08-02 07:59 GMT

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்த பிறகு அங்கு பயங்கரவாத நடவடிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது ஆனாலும், சில இடங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொது சொத்துக்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரில் தேசவிரோத செயல்கள் மற்றும் கல்வீச்சு தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அரசு வேலைகள் மற்றும் பாஸ்போர்ட் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இது குறித்து காஷ்மீரின் சி.ஐ.டி சிறப்பு பிரிவு அதிகாரி காவல் துறைக்கு அளித்த உத்தரவில் "ஜம்மு - காஷ்மீரில் அரசு பணியில் சேருவதற்கும் வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் (passport) பெறுவதற்கும் குற்றப்பிரிவு காவலர்களிடம்  (CID) இருந்து 'செக்யூரிட்டி கிளியரன்ஸ்' எனப்படும் நற்சான்றிதழ் அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். எனவே பாஸ்போர்ட் பெறும் நபர் மற்றும் அரசுப் பணியில் சேர இருக்கும் நபரின் அனைத்து விபரங்களும் பெறப்பட்ட பின்பு சி.ஐ.டி. அதிகாரிகள் அந்த நற்சான்றிதழ் அறிக்கையை வழங்குவர். அப்போது அந்த நபர் மற்றும் அவரது உறவினர்கள் யாரேனும்  வெளிநாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருக்கின்றனரா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வர்.

மேலும் அந்த நபரின் அனைத்து டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் காவல்துறை குற்ற வழக்கு சார்ந்த ஆவணங்களை  ஆராய்ந்து பார்த்த பின்பு தான் சி.ஐ.டி. போலீசார் நற்சான்றிதழ் அறிக்கையை வழங்குவர். அதே போல் ஜம்மு - காஷ்மீரில் கல்வீச்சு போன்ற சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவோருக்கும் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும்  அரசு பணிகள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை வழங்க படமாட்டாது." என்று அவர் தெரிவித்தார்.

இமேஜ் கோடெஸி : outlook

Source: Dinamalar

Tags:    

Similar News