துணி வியாபாரம் செய்வது போல நடித்து, பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு வேலை பார்த்த இம்ரான் யாகூப் ஜிதேலி! கூண்டோடு தூக்கிய என்.ஐ.ஏ!

Update: 2021-03-14 02:08 GMT

துணி வியாபாரம் செய்வதுபோன்ற தோற்றத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த, இம்ரான் யாகூப் ஜிதேலி என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜிதேலி போன்ற நபா்களைப் பயன்படுத்தி, இந்தியாவில் ஐஎஸ்ஐ அமைப்பு தொடா்ந்து உளவுப்பணிகளில் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட பல ஐஎஸ்ஐ முகவா்களுடன் இம்ரான் யாகூப் ஜிதேலி தொடா்பு வைத்திருந்தாா். அவா் பாகிஸ்தானுக்கு சென்றபோது ஐஎஸ்ஐ முகவா்களை சந்தித்துப் பேசியுள்ளது விசாரணையில் தெரிய வருகிறது. 

அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், கடற்படை வீரா்களிடமிருந்து ரகசியத் தகவல்களைப் பெற்று ஐஎஸ்ஐ உளவாளிகளுக்குப் பரிமாறியுள்ளாா். இதற்காக அனுப்பி வைக்கப்பட்ட தொகையை இம்ரான் ஜிதேலி கடற்படை வீரா்களின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்துள்ளாா். 

இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்பு அமைப்புகள் தொடா்பான தகவல்களையும், முக்கியமான ராணுவ ரகசியங்களையும் சேகரிப்பதன் மூலம் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பின் முகவா்கள், இந்தியாவில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனா்.

அவா்களுடன் தொடா்பு கொண்டிருந்தவா்கள் மீது கடந்த ஆண்டு ஜூன் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் தற்போது, ஐஎஸ்ஐ அமைப்பின் இந்திய உளவாளி மீது தேசிய புலனாய்வு அமைப்பு வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

முதல் துணை குற்றப்பத்திரிகை, விஜயவாடாவில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.


Similar News