தோசை சாப்பிட்ட 2 வயது குழந்தை இறந்ததா? போலீசார் விசாரணையில் கூறியது என்ன?
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் கடம்பவனம் பகுதியை சேர்ந்த அபிஷேக் - அஞ்சனம்மா தம்பதியின் 2 வயது மகன் குஷால் நேற்று முன்தினம் குழந்தை தோசை சாப்பிட்டது. அப்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.பதற்றம் அடைந்த பெற்றோர் குழத் தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு குழந்தை மூச்சுத் திணறலால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை அறிந்து பெற்றோர் கதறி அழுதனர். இதற்கு முன்பு வரை தன்னுடைய குழந்தைக்கு எப்படி நேர்ந்ததில்லை என்று பெற்றோர்கள் தெரிவித்ததை அடுத்து இங்கு சந்தேகம் எழுந்து இருக்கிறது. ஒரு வேளை தோசை தொண்டையில் சிக்கி குழந்தை இறந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றன.