சமூக வலைதளத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிலிருந்து பரிசு தொகை வந்துள்ளதாகவும் அதனை உடனே பெற்றுக் கொள்வதற்கு இதனை பதிவிறக்கம் செய்து உங்களது பரிசு தொகையை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளுங்கள் என கூறும் வகையில் ஒரு செயலியின் இணைப்புடன் குறுஞ்செய்தி வைரல் ஆக பரவி வருகிறது
ஆனால் இந்த தகவல் முற்றிலும் போலியான மத்திய அரசின் பப்ளிக் இன்ஃபர்மேஷன் பியூரோ தெளிவுபடுத்தியுள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தகவல் இது அல்ல வாட்ஸ்அப் மூலம் எந்த விதமான இணைப்புகளையும் செயல்களையும் வங்கி அனுப்பாது என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது