வாக்காளர் பட்டியலில் முறைகேடு என்ற குற்றச்சாட்டை முன் வைத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடைபெற்று வரும் நிலையில், இன்று, இண்டி கூட்டணிக் கட்சியினர் தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி தடையை மீறி,பேரணி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தவே, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் செயல்பாடு பொறுப்பற்றதாக இருப்பதாக மத்திய அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நிருபர்களிடம் கூறும் போது, நாடாளுமன்றத்தில் இது போன்ற ஒரு எதிர்க்கட்சியினரை இதுவரை சந்தித்ததே கிடையாது. குறிப்பாக அவர்களுடைய செயல்பாடு பொறுப்பற்றுத் தரமாக இருக்கிறது.
ஆட்சிக்கு வராமலேயே இவ்வளவு பொறுப்பு பெற்ற தன்மையில் செயல்படுகிறார்கள் என்றால், உண்மையில் தலைமை இவர்கள் இடம் இருந்தது என்றால் எப்படிப்பட்ட விதத்தில் இவர்களை நம்ப முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.