பிரபல யுடியூபர் மீது வரதட்சனை கொடுமை வழக்கு: மனைவி புகார், உண்மை என்ன?

Update: 2025-07-08 06:48 GMT

தேனி வீரபாண்டியை சேர்ந்த பெண் டாக்டர் விமலாதேவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டிய மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த கணவரான யுடியூபர் சுதர்சன், அவரது பெற்றோர் சுந்தரராஜன், மாலதி, சகோதரி சக்திபிரியா, இவரின்கணவர் விக்னேஷ்வரன் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தேனி மாவட்டம் வீரபாண்டி முல்லைநகர் விமலாதேவி சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் டாக்டராக பணிபுரிந்தார். அப்போது சுதர்சனை காதலித்து பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்தார். வரதட்சணையாகரூ. 5 லட்சம், 30 பவுன், ரூ. 2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை வழங்கினர். சுதர்சன் யுடியூப் சேனலில் பணிபுரிந்தார். பின் தனியாக சேனல் நடத்தினார். அப்போது சொந்த வீடு கட்டினார்.

அதற்கு விமலாதேவியின் 30 பவுன் நகையை வாங்கினார். பின் புது வீட்டிற்கு குடி புகுந்தனர். வீட்டுக் கடனை அடைக்க முடியவில்லை. சீர்வரிசை பொருட்கள் போதாது என சுதர்சன், பெற்றோர் சுந்தரராஜன், மாலதி, சகோதரி சக்திபிரியா கூறினார். மேலும் 20 பவுன் நகை கொண்டு வந்தால் தான் சேர்ந்து வாழ முடியும் என்று கூறி இருக்கிறார்கள் இதன் காரணமாக இவருடைய மனைவி மகளிர் காவல் நிலையத்தில் அவருடைய கணவரின் மொத்த குடும்பத்தின் மீதும் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்.

Similar News