சனாதனத்தை சீண்டிய கமல்ஹாசன்.. அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
கல்வியே சனாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம் என்ற கமல்ஹாசனின் பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சர்வாதிகாரச் சனாதனச் சங்கிலிகளை முறிக்க வல்ல ஒரே ஆயுதம் கல்வியே என்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசினார்.
மேலும் அவர், "கல்வியைத் தவிர்த்து வேறு எதையும் நீங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளாதீர். கல்வி இல்லாமல் நம்மால் ஜெயிக்க முடியாது. ஏனெனில், பெரும்பான்மை சமூகம் உங்களை வீழ்த்தும். பெரும்பான்மை மூடர்கள் உங்களை தோற்கடிக்கப் பார்ப்பார்கள். ஆகவே கல்வியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்" என்றார். இதற்கு பாஜக தரப்பில் கண்டனம் எழுந்துள்ள நிலையில், இந்துக்கள் யாரும் இனி கமல்ஹாசன் படங்களை பார்க்க கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
சனாதான தர்மத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் நடிகர் கமல் ஹாசனின் படங்களை புறக்கணிக்க வேண்டும். ஓடிடி தளங்களில் கூட அதனை பார்க்க கூடாது. அவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். அதற்கு பிறகு இதுபோன்ற இந்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் வராது என்று பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி வலியுறுத்தி உள்ளார். தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.