மருத்துவமனையில் தானாகவே ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நிலையம்: தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர்!

Update: 2021-04-25 12:01 GMT

குஜராத்தின் காந்திநகரில் இருக்கும் கொலாவாடாவில் உள்ள ஒரு கொரோனா மருத்துவமனையில் ஒரு நிமிடத்திற்கு 280 லிட்டர் திறன் கொண்ட PSA எனும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், குஜராத்தில் பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் இதுபோன்ற மேலும் இதுபோன்ற 11 நிலையங்கள் அமைக்கப்படும் என்றார். தனது காந்திநகரின் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் கொலவாடாவில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கொரோனா மருத்துவ மையத்தில் PSA ஆக்சிஜன் நிலையத்தை அமித் ஷா திறந்து வைத்தார்.


 இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். PM கேர்ஸ் நிதியத்தின் கீழ், மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு வளர்ந்து வரும் ஆக்சிஜனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய குஜராத்தில் மேலும் 11 PSA ஆக்ஸிஜன் திட்டங்கள் வரவுள்ளன. மேலும் இதுபோன்ற நூற்றுக்கணக்கான நிலையம் நாடு முழுவதும் நாடு முழுவதும் அமைக்கப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.


 "கொலவாடாயில், 280 லிட்டர் ஆக்ஸிஜன் காற்றில் இருந்து உறிஞ்சப்பட்டு ஒவ்வொரு நிமிடமும் நோயாளிகளுக்கு வழங்கப்படும். மையத்தில் உள்ள அனைத்து 200 நோயாளிகளின் ஆக்சிஜன் தேவைகளையும் தொடர்ந்து பூர்த்தி செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மையம் அதன் முழு திறனில் இயங்குகிறது" என்று அவர் மேலும் கூறினார்.

Similar News