இந்திய ராணுவ பாதுகாப்பு பணியில் ஈடுபட போகும் ட்ரோன்கள்!!

Update: 2025-09-10 12:32 GMT

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் அமைந்திருக்கும் மலை மற்றும் கடல்களுக்கு மேலே சென்று கண்காணிக்கும் அளவிற்கு ட்ரோன்களை பயன்படுத்த போவதாக இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் நீண்ட காலமாகவே பிரச்சனை நீடித்து வருகிறது. 

மேலும் இந்திய எல்லையை பாகிஸ்தான் சீனா வங்கதேசம் போன்ற நாடுகள் பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல் மாலத்தீவு மற்றும் இலங்கை போன்ற தீவுகளும் இந்தியாவிற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்நிலையில் எல்லை தொடர்பான பிரச்சனைகள் நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு வரும் நிலையில் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் பிரச்சனை ஏற்பட்டது. 

மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நடந்து கொண்டுள்ளது. சமீபத்தில் கூட பகல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு போர் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்திய ராணுவம் எல்லைப் பகுதிகளை கண்காணிப்பதற்காகவும் ஆயுதங்களை கொண்டு செல்வதற்காகவும் ட்ரோன்கள் பயன்படுத்துகின்றது. 

இந்த ட்ரோன்கள் தீவிரவாதிகளை தாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் எல்லைப் பகுதிகளை கண்காணிப்பதற்காக ஐந்தாயிரம் ட்ரோன்களை பயன்படுத்த போவதாகவும், அவை 100 மீட்டர் உயரத்தில் பத்து கிலோமீட்டர் தொலைவில் 9 மணி நேர அளவிற்கு செயல்படும் என்று கூறுகின்றனர். இதனால் வான்வழி அச்சுறுத்தலில் இருந்து இந்தியா பாதுகாத்துக் கொள்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும். 

Tags:    

Similar News