தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதல்!! காஷ்மீர் பகுதியில் பரபரப்பு!!
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் குட்டார் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு படையினருக்கு இந்த வனப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்துக்கொண்டு வனப்பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு இருந்த தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பா என்கின்ற அமைப்பை சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் உள்ளுறை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் வெளிநாட்டவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மோதலில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர்களில் மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கப்பட்டு வந்த நிலையில் அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், தேசத்திற்காக பணியாற்றி துணிச்சலோடு செயலாற்றிய வீரர்களான பெர்பத் கவுர் மற்றும் நரேந்தர் சிந்து ஆகியோரின் உயர்ந்த தியாகத்தை ராணுவம் கௌரவிக்கிறது.
மேலும் இந்திய ராணுவம் இது தொடர்பாக ஆழ்ந்த இரங்கலையும், அவருடைய குடும்பத்திற்கு எப்போதும் உடன் நிற்கின்றோம் என்ற உத்தரவாதத்தையும் அளித்து பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை தொடரும் என்று குறிப்பிட்டுள்ளது. இது தற்பொழுது காஷ்மீர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.