பிற மாநிலங்களின் தயவை மட்டுமே எதிர்பார்த்திருக்கும் நிலையில் கேரளா - தமிழக ஊடகங்களால் புலியாக சித்தரிக்கப்படும் பூனைக்குட்டி!

Update: 2021-04-29 01:15 GMT

டாடா ஸ்டீல் உள்ளிட்ட பல இரும்பு தொழிற்சாலைகள் ஜார்கண்டில் உள்ளது. அங்கே ஆக்ஸிஜன் உற்பத்தியும் செய்கிறார்கள். ஆனால் அவற்றை கொண்டு போக,சேமிக்க ஆக்ஸிஜன் டேங்குகள், சிலிண்டர்கள் எல்லாம் குஜராத்தில் தான் உற்பத்தி ஆகிறது..

அதனால் ஆக்ஸிஜன் சேமிக்கும் உபகரணங்களை சீக்கிரம் தாருங்கள் என்று ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால் நம்மூரில் தொலைக்காட்சியில் வந்து பேசும் கம்யூனிஸ்ட் கட்சி நபர்கள், ஆக்ஸிஜன் உற்பத்தி, சிலிண்டர் உற்பத்தி, மருந்து உற்பத்தி என எதுவுமே இல்லாமல்,இ ன்னொருவன் தயவை மட்டுமே எதிர்பார்த்திருக்கும் கேரளாவை மேற்கோள் காட்டி கம்யூனிஸ்ட் ஆட்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்று இட்டுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.




 


உண்மையில் அவர்களுக்கான தேவை இன்னும் ஏற்படவில்லை. தேவையானதை அண்டை மாநிலங்களிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். 

கேரளா ஏதோ அனைத்து விஷயங்களிலும் முன்னேறிய மாநிலம் என்று இங்குள்ள மீடியாக்களில் பில்டப் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

உண்மை நிலவரம், என்னவென்று பார்த்தால், உற்பத்தி என்பது அங்கே அபூர்வம். 70 சதவிகிதம் பொருட்கள்,வெளி மாநிலங்களிலிருந்துதான் வரணும். தொழில் வளர்ச்சியில் தமிழகத்தவிட பல வருஷங்கள் பின்னாடி நிக்கிறது கேரளா. 

Similar News