இந்திய பயணத்தை தவிர்க்கும்படி, நாட்டு மக்களிடம் அறிவுரை கூறிய அமெரிக்க அரசு!

Update: 2021-04-29 12:25 GMT

உலக நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் கொரோனா தொற்றின் மோசமான விளைவுகளையும் மற்றும் அதிக அளவு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கொண்ட நாடாக தொடர்ந்து இருந்து வருகிறது ஆகவே உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களிடம் குறிப்பாக அமெரிக்கா அரசு தங்கள் நாட்டு மக்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்து உள்ளது அதாவது தாங்கள் இந்தியாவிற்கு செல்ல திட்டம் போட்டு இருந்தால் அதை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.


 தற்பொழுது இந்திய நாட்டில் மோசமான கொரோனா நிலைமைக்கு மத்தியில் விரைவில் அங்கு செல்வதற்கும் மற்றும் இந்தியாவில் வசிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களையும், தற்போது இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு தனது குடிமக்களிடம் கூறியுள்ளது. அமெரிக்க அரசின் தூதரக விவகாரங்கள் துறை 4 ஆம் நிலை பயண ஆலோசனையை இந்தியாவில் உள்ள தனது குடிமக்களுக்கு வெளியிட்டுள்ளது.

இது அமெரிக்காவின் மிக உயர்ந்த பயண ஆலோசனையாகும். "கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள காரணத்தினால், தற்போது இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்களை தங்கள் சொந்த நாட்டுக்கு உடனடியாக வருமாறு, மேலும் தற்பொழுது கிடைக்கக்கூடிய விமான சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்" என்று அமெரிக்க அரசின் தூதரகங்கள் துறை ஒரு ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளது.


 இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே 14 நேரடி தினசரி விமானங்களும், மற்றும் ஐரோப்பா வழியாக இணைக்கும் பிற சேவைகளும் உள்ளன. எனவே இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என அமெரிக்க அரசு கூறியுள்ளது. முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்கா நாட்டு அரசு, இந்தியாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியது. இந்தியாவில் தற்போதைய நிலைமை காரணமாக, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் கூட கொரோனா பாதிப்புகளை ஆபத்து ஏற்படக்கூடும். மேலும் இந்தியாவுக்கான அனைத்து பயணங்களையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்றால், பயணத்திற்கு முன் முழுமையாக தடுப்பூசி போடுங்கள். அனைத்து பயணிகளும் நிச்சசயம் முகக்கவசம் அணிய வேண்டும். மற்றவர்களிடமிருந்து 6 அடி விலகியிருங்கள், கூட்டத்தைத் தவிர்க்கவும், கைகளைக் கழுவவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News