இந்தியாவில் அனுமதி கேட்டு குவியும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் விண்ணப்பம் - மிகப்பெரிய வெற்றி கண்ட அரசின் திட்டம்!

Update: 2021-05-06 01:15 GMT

உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம், தகுதிவாய்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யும் இலக்கு பிரிவுகளின் கீழ், பொருட்களின் நிகர விற்பனையில் 4% வரை ஊக்கத்தொகையை நான்கு வருட காலத்திற்கு நீட்டிக்கிறது.

ஐடி ஹார்டுவேர் கம்பெனிகள் பிரிவின் கீழ் எலக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர் உற்பத்தி நிறுவனங்களான, Dell, ICT (Wistron), Flextronics, Rising Stars Hi-Tech (Foxconn) மற்றும் Lava. ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Dixon, Infopower (JV of Sahasra and MiTAC), Bhagwati (Micromax), Syrma, Orbic, Neolync, Optiemus, Netweb, VVDN, Smile Electronics, Panache Digilife, HLBS, RDP Workstations மற்றும் Coconicsபோன்ற 14 நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனங்கள் பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ளன.

இது குறித்து மத்திய மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், '' ஐடி ஹார்டுவேருக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்துக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளதால், இத்திட்டம் மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது.

ஐடி தொழில்துறை இந்தியாவின் முன்னேற்றத்தில் நம்பிக்கை வைத்துள்ளது. இது தற்சார்பு இந்தியாவுக்கு பிரதமர் விடுத்த அழைப்பை எதிரொலிக்கிறது. இதன் மூலம் நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சூழல் வலுவடையும்'' என்றார்.

அடுத்த 4 ஆண்டுகளுக்கு இத்திட்டம் ரூ.1,60,000 கோடி மதிப்பிலான உற்பத்திக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த உற்பத்தியில், ஐடி ஹார்டுவேர் நிறுவனங்கள் ரூ.1,35,000 கோடிக்கு மேல் உற்பத்தி செய்யும் என தெரிவித்துள்ளன. உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.25,000 கோடிக்கு மேல் உற்பத்தி செய்யும் என தெரிவித்துள்ளன.

இத்திட்டம் ஏற்றுமதியை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.1,60,000 கோடி மதிப்பிலான மொத்த உற்பத்தியில், 37 சதவீதத்துக்கு மேல், அதாவது ரூ.60,000 கோடி ஏற்றுமதியால் கிடைக்கும்.

இத்திட்டம் மின்னுவியல் உற்பத்தியில் ரூ.2,350 கோடி அளவுக்கு கூடுதல் முதலீட்டை கொண்டு வரும். இத்திட்டம் அடுத்த 4 ஆண்டுகளில் தோராயமாக 37,500 நேரடி வேலை வாய்ப்பையும், இதை விட 3 மடங்கு அளவில் மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.

Similar News