ரெம்டெசிவர் மருந்தை தொடர்ந்து ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு தட்டுப்பாடு வரலாம் - விபரீதத்தை முன்கூட்டியே உணர்ந்து செயல்படும் மத்திய அரசு!

Update: 2021-05-14 01:00 GMT

கொரோனாவுக்கு பிந்தைய சிக்கலாக மியூகோர்மைகோசிஸ் என்கிற கருப்பு பூஞ்சைநோய் தாக்குகிறது. இதற்கு ஆம்போடெரிசின்-பி என்ற மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த மருந்துக்கான தேவை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

ஆம்போடெரிசின் பி என்பது தீவிரமான மற்றும் ஆபத்தான பூஞ்சை தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தாகும். பூஞ்சைகளின் வளர்ச்சி மற்றும் பரவலை நிறுத்துவதன் மூலம் செயல்படுகிறது.

ஆம்போடெரிசின் பி  ஸ்ட்ரெப்டோமைசஸ் நோடோசம் பாக்டீரியாவிலிருந்து பெறப்படுகிறது. மருந்து பூஞ்சைகளின் பிளாஸ்மா சவ்வில் குடியேறுகிறது மற்றும் குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு அனைத்து பூஞ்சைகளும் அவற்றின் வளர்ச்சியின் அனைத்து கட்டங்களிலும் முழுமையாக இறப்பதை உறுதி செய்கிறது.

இந்த மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மருந்தின் கூடுதல் இறக்குமதிகள் மற்றும் உள்நாட்டில் இதன் உற்பத்தி அதிகரிப்பு மூலம் வினியோகம் மேம்படுத்தப்படும். 

உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடம் இந்த மருந்து கையிருப்பு நிலையையும், தேவையையும் மத்திய அரசு ஆராய்ந்து, அதன் தொடர்ச்சியாக வரும் 31ஆம் தேதி தேதி வரையில் இந்த மருந்து மாநிலங்களுக்கு கிடைக்க ஒதுக்கி உள்ளது.

இந்த மருந்தை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு நிறுவனங்கள் இடையே சம அளவில் வினியோகிப்பதற்கான ஒரு வழிமுறையை வைத்திருக்குமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஒதுக்கீட்டில் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மருந்து பெறுவதற்கு தொடர்பு புள்ளி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் இந்த மருந்தை நியாயமான விதத்தில் பயன்படுத்துவதற்கு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த மருந்து வினியோகத்தை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் கண்காணிக்கும்.

Similar News