இந்தியாவில் இரண்டு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளது - மத்திய அரசு!
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி இரண்டு கோடிக்கும் அதிகமான கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவை அடுத்த மூன்று நாட்களில் 2,94,660 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தற்போது 2,04,96,525 கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 20 கோடி (20,76,10,230) கொவிட் கொரோனா டோஸ்களை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி, 18,71,13,705 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு மட்டும் இதுவரை 86,55,010 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 72,35,714 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 14,19,296 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தில் கையிருப்பில் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு இதுவரை 4,50,000 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. 4,50,000 தடுப்பூசி டோஸ்கள் சென்னை மாநகராட்சிவசம் கையிருப்பில் உள்ளன என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி யூனியன்பிரதேசத்திற்கு இதுவரை 4,27,140 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 2,31,405 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,95,735 தடுப்பூசி டோஸ்கள் புதுச்சேரிவசம் கையிருப்பில் உள்ளன. மேலும் 29,890 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற இலக்கு வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.