கொரோனாவுக்கு எதிராக கைகொடுக்கும் இந்திய மருத்துவ முறைகள் : களமிறங்கும் ஆயுஷ் அமைச்சகம்.!

Update: 2021-05-22 13:04 GMT

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் சவால்களுக்கு இந்திய மருத்துவ முறைகள் அடிப்படையிலான அணுகுமுறைகள் மற்றும் தீர்வுகளை வழங்க முடியும் என்று தற்பொழுது நம்பிக்கை தரப்பட்டுள்ளது. இதனால் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் ஒரு பிரத்யேக சமூக ஆதரவு ஹெல்ப்லைன் தற்போது உள்ள கடுமையான சூழ்நிலையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண் ஆகும். இந்த 14443 எண்ணிற்கு கால் செய்து ஆலோசனைகளைப் பெறலாம் என்று ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தெரிவித்துள்ளது. ஹெல்ப்லைன் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 6 மணியளவில் தொடங்கி முதல் நள்ளிரவு வரை செயல்படும் என்பது மற்றொரு சிறப்பம்சம்.


இதில் குறிப்பாக, நோயாளிகளுக்கு கொரோனாவுக்கு பிந்தைய மறுவாழ்வு மற்றும் மேலாண்மை அணுகுமுறைகள் பற்றி நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள். ஆயுர்வேத, ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி மற்றும் சித்தா ஆகிய பல்வேறு இந்திய மருத்துவமுறைகளின் வல்லுநர்கள் பொது மக்களின் கேள்விகளுக்கு தீர்வு காண இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சகம் கூறியுள்ளது. இந்த வல்லுநர்கள் நோயாளிகளுக்கு ஆலோசனை மற்றும் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அருகிலுள்ள ஆயுஷ் மருத்துவ வசதிகள் கிடைப்பது குறித்தும் அவர்களுக்கு வழிகாட்டும் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஹெல்ப்லைன் ஆரம்பத்தில் ஒரே நேரத்தில் 100 அழைப்புகளை எதிர்கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் தேவைகளுக்கு ஏற்ப இதனுடைய திறன் அதிகரிக்கும். ஹெல்ப்லைன் மூலம், ஆயுஷ் அமைச்சகம் கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்த சமூக அளவிலான முயற்சிகளுக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியை ஸ்டெப்ஒன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆதரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகம் பொது மக்களின் நலனுக்காக விரிவாக ஆயுர்வேதம் மருந்துகளை ஊக்குவித்து வருகிறது. 

Tags:    

Similar News