ஊரடங்கை கண்டுகொள்ளாத மக்களின் செயல்கள்: அதிர்ச்சியில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்குமா மும்பை அரசு?

Update: 2021-06-01 12:26 GMT

இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு, மத்திய அரசின் சார்பாக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக ஊரடங்கு செயல்படுத்தப்படுகிறது. மக்களின் நலனுக்காக தான் ஊரடங்கு போட படுகிறதே, தவிர அவர்களை வீட்டிற்கு உள்ளே வைக்கும் வேண்டும் என்பதே அரசின் நோக்கம் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அரசின் விதிகளை மதிக்காத மக்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் கருத்து கூறியுள்ளார்.

குறிப்பாக மும்பை இன்று மும்பையில் திடீரென ஏற்பட்ட அதிகப்படியான வாகன நடமாட்டம் குறித்து அதிருப்தி அடைந்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, இவ்வாறு ஊரடங்கை மதிக்காமல் சுற்றினால் கடுமையான தடைகளை விதிப்பதாக எச்சரித்தார்.


முன்னதாக நேற்று, உத்தவ் தாக்கரே மாநிலத்தில் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகள் ஜூன் 15 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் கொரோனா நேர்மறை விகிதம் மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகள் கிடைப்பதைப் பொறுத்து தளர்வுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால் மக்கள் இவற்றிற்கு ஒத்துழைத்தால் மட்டும்தான் தொற்று நோயை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று அவர் மேலும் கூறினார்.


20% அதிகமான நேர்மறை விகிதத்தைக் கொண்ட மாவட்டங்களுக்கும், 75% அதிகமான ஆக்ஸிஜன் படுக்கைகளில் நோயாளிகள் உள்ள மாவட்டங்களின் எல்லைகள் மூடப்படும். அத்தகைய மாவட்டங்களில் எந்தவொரு நபரும் நுழையவோ வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனினும், மரணம், மருத்துவ காரணம் மற்றும் அவசர சேவைகள் அல்லது இதுபோன்ற சூழ்நிலைகள் தொடர்பான சேவைகளுக்கு மட்டும் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Similar News