ஒருங்கிணைந்த வளர்ச்சியில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியல் : தமிழகத்திற்கு எந்த இடம்?

Update: 2021-06-04 12:43 GMT

நிதி ஆயோக் ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக பல தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொண்டு, அந்த தலைப்புகளின் கீழ் திறமையாக செயல்படும் மாநிலங்களை கண்டறிந்த அவற்றுக்கு அங்கீகாரம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் கேரள மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதில் சுமார் பொது சுகாதாரம், வறுமை ஒழிப்பு, பாலின சமநிலை உள்ளிட்ட 16 தலைப்புகளில் 115 பணிகளில் சிறந்து விளங்கும் மாநிங்களின் பட்டியலை ஆண்டுதோறும் நிதி ஆயோக் அமைப்பு வெளியிடுவது வழக்கமான ஒன்று. 


அந்த வகையில், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள கேரள மாநிலம் 75 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் மற்றும் இமாச்சல பிரதேசம் மாநிலங்கள் சுமார் தலா 74 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளன. இதற்கு அடுத்தடுத்த இடங்களை ஆந்திரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட், சிக்கிம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. உத்தரபிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் கடைசி 4 இடங்களை பிடித்துள்ளன. அதிலும் பீகார் 52 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.


பொதுசுகாதாரத்தை பொருத்தம் மட்டும் குஜராத் மற்றும் டெல்லி மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. அதிலும், கடந்த முறை 6வது இடத்தில் இருந்த குஜராத் இந்த முறை முதலிடத்திற்கு முன்னேறியிருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. வறுமை ஒழிப்பு, சுத்தமான எரிசக்தியை வழங்குவதில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் இமாச்சல பிரதேசம், சண்டிகர் மாநிலங்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. கல்வியறிவு சிறப்புடன் செயல்படும் மாநிலங்களாக கேரளா மற்றும் சத்தீஸ்கர் உள்ளது. சுத்தமான குடிநீர் வழங்குவதில் கோவா மற்றும் லட்சத்தீவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News