எல்லை பகுதிகளில் சீனா விமான பயிற்சி - முழு கண்காணிப்பில் இந்திய ராணுவம்!

Update: 2021-06-09 12:23 GMT

கடந்தாண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் கல்வான் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தது. எல்லைப் பகுதியில் ஏற்பட்ட அத்துமீறும் பிரச்சினைகள் காரணமாக இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 50,000 வீரர்கள் கடும் குளிரை தாங்கிக்கொண்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் அதை போது சீன ராணுவ வீரர்கள் சுமார் ஐம்பதாயிரம் அங்கு உள்ளனர். ஆனால் சீன ராணுவ வீரர்களால் அங்கு நிலவும் கடும் குளிரினால் தாங்க முடியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன்காரணமாக சீன அரசின் தரப்பில் 90% வீரர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகிறார்கள். 


இப்படிப்பட்ட சூழ்நிலையில், கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் 22 போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. இதனை இந்திய ராணுவம் சார்பில் விமானங்களில் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. எல்லையில் படைக்குவிப்பு தொடர்பாக இருதரப்பிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டு ஓராண்டாகிய பின்னர், பதற்றம் குறைக்கப்பட்ட போதும் சீனாவின் நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படாத வகையில் தான் தெரிகிறது. 


இந்தியாவில் எல்லை பகுதிகளில் சீன போர் விமானங்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனா தரப்பில் இதுகுறித்து கூறுகையில், நாங்கள் எங்கள் எல்லைப் பகுதிகளில் தான் பயிற்சிகளில் ஈடுபடுகிறோம் என்று கூறியுள்ளார்கள். இருந்தாலும் இந்திய ராணுவம் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தனது போர் விமானங்கள் ஆன ரபேல் விமானங்களை எல்லையில் முன்கள விமானப்படைத்தளங்களில் நிறுத்தி வைத்துள்ளது.

Similar News