'ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு' திட்டம் : உடனடியாக அமல்படுத்த மம்தாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!
மத்திய அரசு "ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு" திட்டத்தை கொண்டுவந்தது. ஆனால் மேற்கு வங்க அரசாங்கம் இந்த திட்டத்தை அமல்படுத்தாமல் இது குறித்து புதிய பிரச்சனைகள் மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு மமதா பேனெர்ஜிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியபோது மமதா பேனெர்ஜி வேண்டுமென்ற அமல்படுத்தாமல் இதை வைத்து அரசியல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பல மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க பல காரணங்கள் கூறி திசைதிருப்பி புதிய பிரச்சனை உருவாக்கினார்.
இதனை தெரிந்து கொண்ட உச்சநீதிமன்றம் எந்த ஒரு காரணமும் கூறாமல் இந்த ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு மேற்குவங்க அரசாங்கத்திற்கு உத்தரவு அளித்தது. அதே போல் இதை வைத்து மறுபடியும் புதிய பிரச்சனை ஒன்றை உருவாக்காமல் இருக்குமாறு மமதா பேனெர்ஜியை எச்சரித்தது. இந்த திட்டம் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களுக்குகு மிகவும் பயன்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.