கடந்த 2019 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி ஐ.நா.வின் 14வது பாலைவனமயமாக்கல் தடுப்பு மாநாட்டை டில்லியில் துவக்கி வைத்தார். இந்நிலையில் ஐ.நா. பொதுச் சபை தலைவர் வோல்கன் போஸ்கிர் ஜூன் 14ம் தேதி ஐ.நா. பாலைவனமயமாக்கல் தடுப்பு மாநாட்டை கூட்டுவதாக அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துகொள்கிறார்.
திங்கள் அன்று நடக்கவுள்ள ஐ.நா.மாநாட்டில் பாலைவனமாக்கல், நிலச்சீரழிவு மற்றும் வறட்சி தொடர்பான உயர்மட்ட உரையாடல் நடைபெறும். அப்பொழுது இந்த ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி இது குறித்து ஒரு முக்கிய உரையை நிகழ்த்தவுள்ளார். இந்த மாநாட்டில் ஐ.நா. உறுப்பு நாடுகள், விவசாய துறை தலைவர்கள், சர்வதேச சமுதாய குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.