கேரளாவில் இருந்து ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த நான்கு பெண்கள் நாடு திரும்புவதற்கு வாய்ப்பு இல்லை!
13 நாடுகளை சேர்ந்த ஐ.எஸ் அமைப்பின் 408 உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 4 இந்தியர்கள், 16 சீனர்கள், 299 பாகிஸ்தானியர்கள், வங்காளதேசம் மற்றும் மாலத்தீவை சேர்ந்தவர்கள் தலா 2 பேர் ஆவர். சிறையில் அடைக்கப்பட்ட 4 இந்தியர்களுமே பெண்கள், குறிப்பாக சோனியா செபாஸ்டியன், ரபீலா, மெரின் ஜேக்கப் மற்றும் பாத்திமா ஈசா.
இவர்கள் கோரசன் மாகாணத்தில் (ஐ.எஸ்.கே.பி)ஐ.எஸ் அமைப்பில் தங்கள் கணவருடன் இருந்தனர். பின்னர் அவர்கள் கால்நடையாக ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் வந்து உள்ளனர். அங்கு நடந்த போரில் அவர்களது கணவர் கொல்லப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் நகருக்கு 2016-18 ஆண்டுகளுக்குள் சென்றுள்ளனர்.
2020 ஆகஸ்டில் கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் சிறைச்சாலையைத் தாக்கிய ஐ.எஸ் பயங்கரவாதிகளில் ஒருவரான இஜாஸ் கல்லுகெட்டியா புராயில் என்பவரை ரபீலா திருமணம் செய்து கொண்டார். இந்த தாக்குதலில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டனர். மார்ச் 2020 இல் "ஸ்ட்ராட்நியூஸ் குளோபல்.காம்" வலைத்தளம் நான்கு பெண்களிடும் பேட்டி எடுத்த வீடியோவை வெளியிட்டது.
கைதிகளை நாடு கடத்த ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் 13 நாடுகளுடன் பேச்சுவார்த்தைத் தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். ஆனால் அவர்கள் நாடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த 4 இந்திய பெண்கள் திரும்புவதில் பல்வேறு அதிகார நிறுவனங்களிடையே ஒருமித்த கருத்து இல்லை என்றும் அவர்கள் மீண்டும் வர அனுமதிக்கப்படுவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.