கொரோனா சிகிச்சையில் இந்தியா அடுத்த மைல்கல் - யாருக்கு ஆக்ஸிஜன் தேவை? சாப்ட்வேர் கண்டுபிடிப்பு!

Update: 2021-06-20 01:58 GMT

தீவிர சிகிச்சை பிரிவில் சுவாசக் கருவி பொருத்துவதற்கான தேவை ஏற்படக்கூடிய நோயாளிகளை கண்டறிந்து ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர் தேவையான ஏற்பாடுகளை செய்ய உதவும் புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டது.

Covid Severity Score (CSS)- எனப்படும் இந்த மென்பொருள் கொல்கத்தா மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள மூன்று கொவிட் பராமரிப்பு மையங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாரக்பூரில் உள்ள 100 படுக்கைகள் கொண்ட அரசு மையமும் இதில் அடங்கும்.

திடீர் அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தேவைகள் பெருந்தொற்றின் போது மருத்துவமனைகளுக்கு சவால் விடுப்பதால், அத்தகைய நிலைமைகள் குறித்து சரியான நேரத்தில் தகவல் கிடைத்தால் சிக்கலை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் பிரிவான Science for Equity, Empowerment and Development (SEED)ஆதரவுடன், ஐஐடி கவுகாத்தி, இணைந்து கொல்கத்தாவை சேர்ந்த Foundation For Innovations In Healthஇந்த மென்பொருளை உருவாக்கியுள்ளது.

அறிகுறிகள், உடல்நிலை, பரிசோதனை அறிக்கைகள் மற்றும் இணை நோய்த்தன்மை ஆகியவற்றை கணக்கிட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சுவாசக் கருவி பொருத்துவதற்கான தேவை ஏற்படக்கூடிய நோயாளிகளை இது கண்டறிகிறது.

முன்களப் பணியாளர்களுக்கு தேசிய திறன் தகுதி கட்டமைப்பில் சீரமைக்கப்பட்ட மாதிரியில் பயிற்சி மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம்  சான்றிதழ் பெற்றவர்கள், இந்த மென்பொருள் அனைத்தையும் ஒரு டேப்லெட் கணினியில் பதிவு செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதனால் ஒரு நோயாளிக்கு மருத்துவரின் ஆலோசனை நேரத்தைக் குறைத்து, மருத்துவர்களின் பயணத் தேவையை குறைக்கிறது. இது ஐ.சி.யூ மற்றும் ரெஃபரலில் வென்டிலேட்டர் தேவைப்படும் நோயாளிகளை முன்கூட்டியே அடையாளம் காண உதவுகிறது.

மேலும் முக்கியமான பராமரிப்பு ஆதரவு தேவைப்படாதவர்களுக்கு மருத்துவமனை பரிந்துரைகளை குறைக்கிறது. இதனால் அதிகமான மருத்துவமனை படுக்கைகளை புழக்கத்தில் விடுகிறது. மோசமான வீட்டு நிலைமைகள் காரணமாக சிகிச்சை பெற  முடியாத அல்லது வீட்டில் தனிமைப்படுத்த முடியாத நோயாளிகளுக்கு கண்காணிக்கப்பட்ட மருத்துவ உதவியை வழங்கவும் இது உதவும்.

Similar News