"ட்ரோன்கள் மூலம் நடக்கும் தாக்குதலை , சமாளிக்கும் திறனை வளர்த்து வருகிறோம்" - ராணுவ தளபதி நம்பிக்கை!

Update: 2021-07-01 14:37 GMT

சில தினங்களுக்கு முன்பு ஜம்மு விமான படை தளத்தில் ட்ரோன் மூலம் நடந்த தாக்குதல் இந்திய நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மேலும் பல ட்ரோன்கள் பாகிஸ்தான் பகுதியில் இருந்து காஷ்மீர் எல்லைக்கு வந்தன. அதில் ஒரு ட்ரோனை அங்கு இருந்த அதிகாரிகள் தாக்கி, அது குறித்து அசோதனை செய்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், ட்ரோன்கள் மூலம் நடக்கும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தலை சமாளிப்பற்கான திறனை வளர்த்து வருகிறோம் என்று ராணுவ தளபதி கூறியுள்ளார். 


இது குறித்து ராணுவ தளபதி எம் எம் நரவானே கூறுகையில் "பாகிஸ்தானுடன் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகு, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவல் இல்லை. ஊடுருவல் இல்லாததால், காஷ்மீரில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அமைதி மற்றும் வளர்ச்சியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக சில பயங்கரவாதிகள் சதிச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர் ,எனவே இந்த சதிச்செயலை முறியடிக்க நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

ட்ரோன்கள் மிகவும் எளிதாக கிடைப்பதால் இது பாதுகாப்பு வீரர்களுக்கு பெரும் சிக்கலையும், சவாலையும் ஏற்படுத்துகிறது. ட்ரோன்கள் மூலம் நடக்கும் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில், ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் . இதற்காக சில குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

சில நாடுகளின் ஆதரவு மற்றும் நாடுகளால் ஏவப்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான ஆற்றலை வளர்த்து உள்ளோம். ட்ரோன்கள் மூலம் நடக்கும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தலை சமாளிப்பற்கான திறனை வளர்த்து வருகிறோம்." என்று எம் எம் நரவானே கூறினார்.

Tags:    

Similar News