"இந்தியாவின் டிஜிட்டல் தீர்வுகளுக்கு, உலக நாடுகள் அங்கீகாரம்" - பிரதமர் மோடி பெருமிதம்!

Update: 2021-07-02 09:47 GMT

"டிஜிட்டல் இந்தியா" திட்டம் நமது இந்திய நாட்டில் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த டிஜிட்டல் திட்டத்தால் நமது நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் நன்மைகள் குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி கட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். டிஜிட்டல் இந்தியாவின் திக்ஷா, இ-நாம், இ-சஞ்சீவானி உள்ளிட்ட திட்டங்களால் பலன் அடைந்த பயனாளிகளுடன் அவர் நேற்று கலந்துரையாடினார்.


நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசுகையில் "டிஜிட்டல் இந்தியா திட்டம் 6 ஆண்டுகளாக செயல்படுவது, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியாவின் வேகமான முன்னேற்றத்தை குறிக்கிறது. இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், மக்கள் தங்கள் கல்வியை தொடரவும், மருத்துவ வசதியை பெறவும் டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்தது.


இந்த கொரோனா காலத்தில் இந்தியா உருவாக்கிய டிஜிட்டல் தீர்வுகளை உலக நாடுகள் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளன. கொரோனா தொற்று பாதித்தவரை கண்டறிய 'ஆரோக்கிய சேது' என்ற செயலி பெரிதும் பயன்பட்டது. இதன்மூலம் நாட்டில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. இந்தியர்களின் தகவல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி திறன் என்பது, இந்தியாவிற்கு உலகளவில் பெரும் வளர்ச்சி மற்றும் வாய்ப்பு இருப்பதை உணர்த்துகிறது. ஆகையால், நாம் அனைவரும் இணைந்து இந்த தசாப்தத்தை இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தமாக மாற்றி அதில் வெற்றி பெறுவோம்." என்று அவர் பேசினார்.

Tags:    

Similar News