காஷ்மீரில் உள்ள சுந்தர்பானி வனப்பகுதியில் நேற்று இரவு பயங்கர காட்டுத் தீ!

Update: 2021-07-02 12:33 GMT

சமீபத்தில் ஜம்மு விமான படை தளத்தில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது, இதில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். இதன் காரணமாக காஷ்மீர் எல்லைப்புற மாவட்டமான ரஜவுரியில் ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டது.இந்த நிலையில் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள குல்தாபி பகுதியில் நேற்று இரவு பயங்கர காட்டுத்தீ உருவாகியுள்ளது.


ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ரஜவுரி மாவட்ட வனத்துறை அதிகாரி இது குறித்து கூறியதாவுது "ரஜவுரி மாவட்டம் குல்தாபி அருகே உள்ள சுந்தர்பானி வனப்பகுதியில் நேற்று இரவு காட்டுத் தீ ஏற்பட்டது. இதனை அறிந்தவுடன் வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர கடும் பாடு பட்டனர். பல முயற்சிகளுக்கு பிறகு ஒரு பகுதியில் ஏற்பட்ட தீயை முழுவதுமாக கட்டுப்படுத்தியுள்ளோம் . மேலும் மற்ற பகுதிகளில் ஏற்பட்டிருக்கும்  தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தீயை முழுவதுமாக கட்டுப்படுத்திய பின், இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கிடப்படும். காட்டுத்தீ ஏற்பட அதிக வெப்பம் காரணமாக இருக்கலாம். " என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News