கொரோனா காலத்தில் ஏழை மாணவர்களுக்கு கல்வி: தேசிய விருது பெற்ற நாசிக் சமுதாய வானொலி!

Update: 2021-07-03 12:47 GMT

தற்போதுள்ள கொரோனா ஊரடங்கு காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் கல்வி நிலை என்பது ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அத்தகைய மாணவர்களுக்கு பல்வேறு உதவி தொகைகளையும் மற்றும் நன்கொடை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது, மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள விஷ்வாஸ் தியான் பிரபோதினி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் ரேடியோ விஷ்வாஸ் 90.8. இது நாள்தோறும் 14 மணி நேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது.


கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக 2020 ஜூன் மாதம் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் தொடங்கிய, அனைவருக்கும் கல்வி என்ற நிகழ்ச்சி ஆகும். இதில் 3 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது. ஜில்லா பரிஷத் என்ற நிகழ்ச்சியில் மூலம் நாசிக் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் சென்றடையும் விதத்தில் இந்தி, ஆங்கிலம், மராத்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடங்கள் ஒலிபரப்பப்பட்டன.


இந்த நிகழ்ச்சிக்காக ரேடியோ விஷ்வாசுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய சமுதாய வானொலி விருதுகளின் 8வது பதிப்பில் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து நிலைய இயக்குநர் டாக்டர் ஹரி விநாயக் குல்கர்னி இதுகுறித்து கூறுகையில், ஸ்மார்ட் போன் வாங்க முடியாத ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சி மிகவும் உதவிகரமாக இருந்தது. எங்கள் நிலையத்திற்கு வருகை தந்து பாடங்களை பதிவு செய்த 150 ஆசிரியர்களின் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி மூலம் இதுவரை 60,000 மாணவர்கள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News