ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் அரசு அமைந்துள்ளது. இந்த ஒடிஷா மாநிலத்தில் அமைந்துள்ள பல கோயில்களில் திருவிழா சமயத்தில் ரத்த யாத்திரை நடத்தப்படும். குறிப்பாக, புரியில் உள்ள ஜகந்நாதர் கோவிலில் ஆண்டுதோறும் உலகம் பிரசித்தி பெற்ற ரத யாத்திரை நடப்பது வழக்கம்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சென்ற வருடம் புரியில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆண்டு ரத யாத்திரை விழா 12 ஆம் தேதி நடக்க உள்ளது. எனவே புரியில் மட்டும் ரத யாத்திரை நடத்த, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஒடிசா மாநிலம் முழுதும் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை ஒடிசா உயர் நீதிமன்றம் நிராகரித்ததை, எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி,என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு "நானும் புரிக்கு செல்ல விரும்புகிறேன், அங்கு சென்று ஒன்றரை ஆண்டாகிறது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் சென்ற ஆண்டை விட இந்தாண்டு அதிகமான நபர்கள் இறந்துள்ளனர் மேலும், இந்த நோயால் பலர் இன்னும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒடிசா மாநிலம் முழுதும் ரத யாத்திரை நடத்துவது என்பது சரியாக இருக்காது. கடவுள் விரும்பினால் அடுத்தாண்டு சிறப்பாக ரத்த யாத்திரை நடத்தி கொண்டாடலாம். புரி ஜகந்நாதர் கோயிலை தவிர மற்ற கோயில்களின் ரத யாத்திரை நடத்த அனுமதிக்க முடியாது." என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.