கொரோனா தடுப்பூசி பணியில் மைல்கல்லை எட்டிய கர்நாடகா: சுகாதாரத்துறை அமைச்சர் பெருமிதம்!

Update: 2021-07-07 12:22 GMT

மக்கள் அனைவரும் தங்களுடைய பாதுகாப்பு தற்பொழுது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக நூல் தொகுப்பில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கு தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வது குறித்து அவர்கள் பெருமளவு விழிப்புணர்வு அடைந்துள்ளார்கள் என்று கூறலாம். ஏனென்றால் தினம், தினம் தடுப்பூசி போடும் பொருட்களில் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில் தற்போது தென்னிந்தியாவில் அதிகமாக தடுப்பூசி சில மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா முதன்மை வகிக்கிறது. 


அதிக அளவில் தடுப்பூசி போடும் பணிகளில் தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகா முதலிடத்தில் இருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் அவர்கள் இது குறித்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "தடுப்பூசி போடும் பணிகளில் கர்நாடகா மீண்டும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது. இதுவரை 2 கோடிக்கும் மேல், அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த பட்டிருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.


கர்நாடகாவில் இதுவரை 2.4 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 13 ஆயிரம் மையங்கள் மூலம் தினமும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்று, கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஒவ்வொரு மாநிலங்களும் தற்பொழுது தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது கவனம் செலுத்த ஆரம்பித்து உள்ளார்கள் என்றும் சொல்லலாம். 

Similar News