கர்நாடகா மாநிலத்தில் சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, மாநிலத்தில் வடக்கு பகுதியில் ஐந்து மாவட்டங்களில் தொழில்துறை மையங்களை அமைக்கக் கர்நாடக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் புதன்கிழமை அன்று தெரிவித்தார்.
"வடக்கு பகுதியில் உள்ள பீதர், கலபுராகி, கொப்பல், ராய்ச்சூர் மற்றும் யாத்கிர் போன்ற மாவட்டங்களில் தொழில்துறை மையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது, இது பல்வேறு முதலீடு வசதிகளைச் செய்யவும் மற்றும் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்" என்று ஷெட்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உதாரணமாக, கொப்பல் மாவட்டத்தில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்குப் பொம்மைகளை ஏற்றுமதி செய்ய ₹௫,000 கோடி முதலீட்டில் பொம்மை கிளஸ்ட்டர் அமைக்கப்படும், அது 10,000 வேலை வாய்ப்புகளை வழங்கும்.
"இந்த தொழில்துறை திட்டத்தின் ஒரு பகுதியாக, பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழில்கள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த விரும்புகிறோம்" என்று ஷெட்டர் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஐந்து மாவட்டங்களிலும் ரயில்,விமானம் மற்றும் சாலை இணைப்பின் வளர்ச்சி விரைவாக வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
"யாத்கீர் பகுதியில் தொழில்துறை பகுதியில் 1000 ஏக்கர் நிலத்தில் மருந்து கிளஸ்ட்டரை உருவாக்க வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன, அங்கு 62 நிறுவனங்களுக்கு மொத்தமாக ₹2,531 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது," என்று ஷெட்டர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தொழில்களைப் புதுப்பிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த ₹3 லட்சம் கோடி பொருளாதார தொகுப்பு பற்றிப் பேசிய அமைச்சர், சுறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களுக்கு மின் கட்டணத்தை மாநில அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
Source: Swarajya Magazine