சபாஷ்! இந்தியாவில் கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்த மோடி அறிவித்த முக்கியமான முடிவு!
மத்திய அமைச்சரவையின் விரிவாக்கம் காரணமாக புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா டெல்லியில் நடந்தது. இதில் புதிய அமைச்சர்கள் மற்றும் இணைய அமைச்சர்களுக்கு இந்திய நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடிய நிலையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அதற்கு அமைச்சர்களின் ஒப்புதலும் வழங்கப்பட்டது. குறிப்பாக அந்த அமைச்சரவை கூட்டத்தில் "இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பு: பகுதி II" க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதல் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான நமது போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் 23 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் அமைச்சரவையில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒதுக்கப்பட்ட இந்த 23 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் குழந்தைகள் பிரிவில் தேவைப்படும் I.C.U படுக்கைகள், ஆக்ஸிஜன் சேமிப்பு, மருத்துவ அவசர ஊர்தி மற்றும் மருந்துகள் வாங்குவது போன்ற தேவைகலுக்கான ஏற்பாடுகள் செய்து தர படும்." என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.