கொரோனாவால் கிராமங்களில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை: பொருளாதார நிபுணர்களின் கருத்து!

Update: 2021-07-16 12:51 GMT

இந்தியாவில் தற்போது இருந்து வரும் வைரஸ் தொற்றுகளுக்கு இடையில் வேலைவாய்ப்பின்மை என்று ஒரு நிலையும் அதிகரித்து வருகின்றது. எனவே இதுகுறித்து பிபேக் தேப்ராய் மற்றும் சிராக் துதானி ஆகிய பொருளாதார ஆலோசனைக் குழுவை சேர்ந்தவர்கள் தற்பொழுது தனது அறிக்கையை வெளியிட்டுள்ளனர் அதாவது கொரோனாவிற்கு பிந்தைய வேலை வாய்ப்பு எப்படி உள்ளது? என்ற தலைப்பில் மையமாக வைத்து இந்தக் குழு தன்னுடைய ஆய்வைத் தொடங்கியது. இதன் முடிவில் ஒரே ஆண்டுக்குள் தமிழகத்தின் நகர்ப்புறங்களில் வேலையின்மை பெருகிய உள்ளதாக குழு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. 


ஒவ்வொரு மாநிலத்திலும் மையமாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியது. ஆனால் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பினை என்பது முன்பை விட தற்பொழுது குறைந்துள்ளதாக இதில் தெரிகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் வேலைவாய்ப்பு சூழல், நகரம், கிராமம் ஆண்கள், பெண்கள், வேலையின்மையின் அளவு, தொழிலாளர் பங்கேற்பு விகிதம், வயது வாரியான வகைப்பாடுகள் போன்ற வரையறைகளின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 


தமிழகத்தில் 2020 ஆண்டில் இருந்து வேலையின்மையின் அளவு உயர ஆரம்பித்தது. ஏப்ரலில் கிராமப்புறங்களில் வேலையின்மை 53.19% அதிகரித்து உள்ளது. அதே சமயத்தில் தேசிய அளவிலான வேலையின்மை 22.19% இருந்தது. நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் இருக்கும் இளைஞர்களின் நிலைமைதான் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது ஏனெனில் அவர்களுக்குக் கிடைக்கின்ற வேலைவாய்ப்பின்மை மிகவும் குறைக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வு முடிவில் தெரிகிறது.

குறிப்பாக 20 -24 வயது வரையுள்ள இளைஞர்கள், கடந்த ஆண்டு பட்டம் பெற்றவர்களும் அதற்கு மேலே படித்தவர்களும் தான் இதரக் கல்வித் தகுதியுடையவர்களை விட அதிக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, "இந்த ஆண்டு மே மாதம் முதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வேலையின்மையின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தே இருக்கும்" என்று கணிக்கின்றனர்.

Similar News