இந்திய எல்லை பகுதிக்கு அருகில் கான்கிரீட் கட்டடங்களை எழுப்பும் சீன ராணுவம்!

Update: 2021-07-17 02:00 GMT

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதை அடுத்து இந்தியா - சீனா ராணுவம் இடையே கடந்த ஆண்டு கடும் மோதல் நிலவியது. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இரு தரப்பு வீரர்கள் பலியாகினர். இரு நாட்டு ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இடையே நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து சீன ராணுவம் திரும்பி சென்றது. 


இந்த நிலையில் வடக்கு சிக்கிமில் உள்ள நாகு லா பகுதிக்கு எதிரே நமது இந்திய எல்லை பகுதிக்கு மிக அருகில் நிரந்தர கான்கிரீட் கட்டடங்களை சீன ராணுவம் எழுப்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சாலை வசதிகளும் மிக சிறப்பாக இருப்பதால் கான்கிரீட் கட்டடம் அமைந்துள்ள இடத்தில் இருந்து நமது இந்திய எல்லை கட்டுப்பாட்டு பகுதியை சீன வீரர்கள் மிக விரைவாக வந்தடைந்து விட முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.


இதே போன்ற கட்டடங்களை கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச பகுதிகளிலும் சீன ராணுவத்தினர் கட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது. கடும் குளிர் காலங்களில் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள சீன வீரர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இது போன்ற நேரங்களில் சீன ராணுவ வீரர்களுக்கு இந்த கட்டடம் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதுகின்றனர். எனினும் நமது இந்திய ராணுவம் சீனாவின் இந்த செயல்பாட்டை மிகவும் கூர்மையாக கவனித்து கொண்டு, கடும் எச்சரிக்கையாக இருக்கிறது.

Tags:    

Similar News