அமலாக்கத்துறை அதிரடி : விஜய் மல்லையாவின் பங்குகள் விற்பனை.. எவ்வளவு கோடி மீட்பு?

Update: 2021-07-17 10:19 GMT

'Kingfisher Airlines' விமான சேவை நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜய் மல்லையா. பிரபல தொழிலதிபரான இவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைமையிலான பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் அவர் வசித்து வந்தார். இந்தியாவின் கடும் முயற்சியால், லண்டன் காவல் துறையினர் விஜய் மல்லையாவை கைது செய்தனர்.


மேலும்,அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறையினர் விஜய் மல்லையாவுக்கு இந்தியாவில் சொந்தமான பல்வேறு சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.


மல்லையாவுக்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பங்குகளை அவருக்கு கடன் வழங்கிய வங்கிகளுக்கு அமலாக்கத் துறை வழங்கியது. இவற்றை விற்பனை செய்ததன் வாயிலாக 7,181 கோடி ரூபாய் வங்கிகளுக்கு கடந்த மாதம் திரும்ப கிடைத்தது. மேலும் விஜய் மல்லையாவின் இன்னும்  சில பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் அவருக்கு கடன் அளித்த வங்கிகள் 792 கோடி ரூபாயை மீட்டனர்.

Tags:    

Similar News