கேரளா: அதிகரித்து வரும் கொரோனா, ஜிகா வைரஸ்களுக்கு இடையில் பக்ரீத் தளர்வுகள்!

Update: 2021-07-17 12:46 GMT

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், சில மாநிலங்களில் மட்டும் தான் பாதிப்பின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது. அத்தகைய மாநிலங்களில் ஒன்றாக கேரளா திகழ்ந்து வருகிறது. எனவே மத்திய அரசாங்கம் சார்பில் அனுப்பப்பட்ட குழுக்கள் மூலமாக பாதிப்பு தற்போது கேரளாவில் குறைந்துள்ளது. ஜிகா வைரஸ் காரணமாக இங்கு பாதிப்புகளில் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா மற்றும் ஜிகா வைரஸ்கள் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வந்த நிலையில் தற்போது நிலைமை மாறியுள்ளது. 


கணிசமான அளவில் பாதிப்புகள் குறைந்ததன் காரணமாக கேரளாவில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக வார நாட்களில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மட்டும் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப் படுகிறது.


இந்த நிலையில் அனைத்து நாட்களிலும் கடைகளை திறப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நேற்று திருவனந்தபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வியாபாரிகள் சங்க மாநில தலைவர் நசருதீன் தலைமையில் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். தற்போது வரவுள்ள பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் மூன்று நாட்களுக்கு கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் கொரோனா தொற்று விகிதம் 15 சதவீதத்திற்கும் குறைவான பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களான பலசரக்கு, பழம், காய்கறி, மீன், இறைச்சி, பேக்கரி கடைகளும் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

Similar News