கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்தும் பாரதம் : வந்து இறங்கும் நவீன ஹெலிகாப்டர்கள்!
இந்தியாவில் கடல்சார் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அண்டை நாடுகளின் நடவடிக்கைகளை கவனிப்பதற்காக மூலமாகவும், ட்ரோன் தாக்குதல் நடவடிக்கைகளை தடுப்பதன் மூலமாகவும் தனது பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா விரும்புகிறது. அந்த வகையில் தற்பொழுது இந்த நடவடிக்கைக்காக இரு அதிநவீன ஹெலிகாப்டர்களை அமெரிக்க கடற்படை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் மேற்கொண்டது.
2020 ஆம் ஆண்டு 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஹெலிகாப்டர்களை வழங்க இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. மேலும் இதன் சிறப்பம்சம், எத்தகைய பருவ நிலையிலும் செயல்படும் ஆற்றல் உள்ள MH-60R ரக ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி அமெரிக்காவில் உள்ள லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்த இரு ஹெலிகாப்டர்கள் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதற்கான விழா அமெரிக்காவின் சான்டீகோ நகர கடற்படை விமான தளத்தில் நடந்தது.
அப்போது ஹெலிகாப்டர் சப்ளை தொடர்பான ஆவணங்களை அமெரிக்க கடற்படை விமான பிரிவு துணை கமாண்டர் கென்னத் வைட்செல், இந்திய கடற்படை துணை கமாண்டர் ரவ்நீத் சிங்கிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவிற்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சித்து கூறுகையில், "இரு நாடுகளும் இணைந்து ராணுவம் பயன்படுத்தும் அதிநவீன போர் பொருட்கள் தயாரிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இந்திய கடற்பகுதியின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பிராந்திய அளவிலான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், இந்த ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்கும் மிகவும் உதவும். இவற்றில் புதுமையான சாதனங்கள், போர் ஆயுதங்கள் ஆகியவற்றை பொருத்தும் வசதிகள் உள்ளன" என்று அவர் கூறினார்.