கோயில்கள் மற்றும் மதமாற்றம் குறித்த முக்கிய தீர்மானங்கள் : விஷ்வ ஹிந்து பரிஷத் அதிரடி!

Update: 2021-07-20 01:45 GMT

ஹரியானாவின் பரிதாபாதில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த இரண்டு நாள் சந்திப்பில் நாடு முழுவதும் 275 அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் பாரத நாட்டில் இருந்து வெளியில் இருக்கும் நபர்களும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது மதமாற்ற தடுப்பு சட்டம் மற்றும் கோயில்களை அரசாங்கத்திடம் இருந்து விடுவிக்கும் செயல்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, இதற்கான  தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


இந்த சந்திப்பு குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறுகையில் "தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு கட்டுப்பாட்டின்கீழ் பல கோவில்கள் உள்ளன. கோவில்களில் யார் பூஜை செய்ய வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை, அரசு ஏன் தீர்மானிக்க வேண்டும். இன்னும் சில கோயில்களில் உள்ள அதிகாரிகள், கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தலையிட்டு வருவது மிகவும் தவறான செயல்.


எனவே, அரசு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோவில்களை ஹிந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும். அதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில்  வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்படுவதை தடுக்கும் கடுமையான சட்டத்தை இயற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது." என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News