இந்தியாவில் பலர் ஆக்சிஜன் இன்றி உயிரிழந்தனர்? எதிர்க்கட்சியின் கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் நெத்தியடி பதில்!

Update: 2021-07-21 10:57 GMT

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருந்தது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் போது நோய் தொற்றால் மிகவும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு ஆக்ஸிஜனுக்கான தேவை ஏற்பட்டது. இதனை அறிந்த மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இந்தியாவின் ரயில்வே துரையின் ஒத்துழைப்புடன் விரைவு ரயில்கள் மூலமாக ஆக்ஸிஜனை வழங்கியது. 


இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பல மாநிலங்களில் ஏற்பட்டது. இதன் காரணமாக பல பாதிக்கப்பட்ட மக்கள் ஆக்சிஜன் இன்றி உயிரிழந்தனர் என்பது குறித்து ராஜ்யசபாவில் நேற்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். எதிர்கட்சியினரின் கேள்விக்கு மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் பதில் அளித்தார்.


இதனை அடுத்து மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறுகையில் " தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விபரங்களை மத்திய அரசிடம் மாநில அரசுகள் அறிக்கையாக சமர்ப்பித்து வருகின்றன.  உயிர் இழந்த மக்களின் விபரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன. அந்த விபரங்களை பார்க்கும் போது எந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று தெரிகிறது." என்று அவர் பதில் அளித்தார்.


Tags:    

Similar News