கேரளா: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ், அமல்படுத்திய கடும் கட்டுப்பாடுகள்!

Update: 2021-07-24 13:08 GMT

இந்தியாவைப் பொருத்தவரையில் இரண்டாவது அலை கொரோனா வைரஸ்கள் பெரும்பாலான மாநிலங்களில் குறைய தொடங்கி இருக்கின்றது. இருந்தாலும் ஒரு சில மாநிலங்களில் இதன் பாதிப்பு இன்னும் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கின்றது. அந்த வகையில் தற்போது கேரளாவில் பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும், மேலும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக கேரள அரசு கடும் கட்டுப்பாடுகளை தற்பொழுது இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சனி மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. 


நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஆனால் கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. நேற்று ஒரே நாளில் மட்டும் கேரளாவில் 17,481 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 105 பேர் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்றை தற்பொழுது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 


நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை முகாம்கள் மூலமாக பேரிடம் மேலாண்மை சட்டத்தின்படி 3 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது வெகுவாக குறைந்து வரும் நிலையில், பக்கத்து மாநிலமான கேரளாவில் தொற்று அதிகரித்து வருவது தமிழக- கேரள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News