டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பெண்மணிக்கு பரிசுத்தொகை.. எவ்வளவு தெரியுமா?

Update: 2021-07-25 13:43 GMT

தற்பொழுது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கத்தை பளுத்தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு அவர்கள் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார். முதன் முதலில் கரணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் பதக்கம் வென்ற 2வது பெண்மணியாக மீராபாய் சானு அறியப்படுகிறார். கடுமையாக உழைத்து நாட்டுக்காக இப்போது ஒலிம்பிக் வெள்ளி வென்று வரலாறு படைத்துள்ளார். 


2021 ஆசிய வெய்ட்லிப்டிங்கில் 119 கிலோ எடைத்தூக்கினார். இது உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது ஒலிம்பிக் பதக்கத்தை நாட்டுக்காக சமர்ப்பிப்பதாக மீராபாய் சானு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "என்னுடைய கனவு பலித்துள்ளது. இந்த பதக்கத்தை என் நாட்டுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த பயணத்தில் என்னுடன் இருந்த கோடான கோடி இந்திய மக்களுக்கும், அவர்களின் பிரார்த்தனைகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 


இதற்காக எனது குடும்பமும், எனது அம்மாவும் பல தியாகங்களை செய்துள்ளனர். அரசு, விளையாட்டு அமைச்சகம் என எனது பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த எல்லோருக்கும் நன்றிகள். எனது பயிற்சியாளர் விஜய் ஷர்மா அவருக்கும் நன்றி" என மீரபாய் சானு தெரிவித்துள்ளார். இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்த மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங், மாநிலத்திற்காக மகத்தான சாதனை புரிந்ததற்காக அவருக்கு பரிசுத்தொகையாக ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

Similar News